தேவதானப்பட்டி அருகே வீடு புகுந்து நகை - பணம் கொள்ளை

தேவதானப்பட்டியில் வீடு புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவதானப்பட்டி அருகே வீடு புகுந்து நகை - பணம் கொள்ளை
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது38). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக கொடைக்கானல் பள்ளங்கியில் விவசாய நிலம் உள்ளது.

புயல் காரணமாக இவரது விளை நிலம் மற்றும் தோட்டத்து வீடு பாதிக்கப்பட்டால் அதனை சீரமைப்பதற்காக குடும்பத்துடன் அங்கே தங்கி இருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு செல்லப்பாண்டியின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை தூக்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.

பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இன்று காலையில் தோட்டத்தில் பீரோ கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் செல்லப்பாண்டி வீட்டில் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. இது குறித்து செல்லப்பாண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டிற்குள் புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com