தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி தூய்மை பணியாளர் பலி

தேவதானப்பட்டி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் பலியானார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேல்மந்தையைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தேனியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற சரக்கு வேன் பரமசிவம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com