தேன்கனிக்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்த நபிஜான் (வயது 44) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com