கோவை அரசு ஆஸ்பத்திரியில் 49 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 49 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 158 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 49 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை
Published on

கோவை:

பருவ நிலை மாற்றத்தால் கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதும் இதுவரை கோவை மாவட்டத்தில் 21 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 49 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 158 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த மூதாட்டி மரியஜோஸ்பின் (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவர் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மரியஜோஸ்பினுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com