டெல்லி: விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் - வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம்

தலைநகர் டெல்லியில் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலாளார்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் - வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம்
Published on

மத்திய டெல்லி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி வணிக அனுமதி உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கெடு விதித்தனர்.

ஜனவரி 7-ம் தேதி காலக்கெடு முடிவடைந்த நிலையில், அனுமதி உரிமம் பெறாத கடைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள் என பலர் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com