ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பினார் மீராபாய் சானு -உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
மீராபாய் சானுவுக்கு வரவேற்பு
மீராபாய் சானுவுக்கு வரவேற்பு
Published on

புதுடெல்லி:

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஜப்பானில் இருந்து புறப்பட்ட மீராபாய் சானு இன்று டெல்லி வந்து சேர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com