தர்மபுரியில் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவி

திருமண ஏற்பாடு செய்தது பிடிக்காததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
Published on

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அடுத்துள்ள சவுளுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். விவசாயி. இவருக்கு வாசுகி (வயது 22) என்ற மகள் உள்ளார். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார்.

இந்த நிலையில் வாசுகிக்கு அவரது குடும்பத்தார் திருமண ஏற்பாடு செய்து இருந்தனர். இதுகுறித்து வாசுகி அவரது குடும்பத்தினரிடம் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்காத வாசுகியின் குடும்பத்தினர் மேற்படி திருமண ஏற்பாட்டினை செய்து கொண்டிருந்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வாசுகி நேற்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com