டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி

ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்
Published on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். இதனால் ஆர்சிபி-யின் ரன் விகிதம் சராசரியாக உயர்ந்து கொண்டு வந்தது.

பவர் பிளேயில் விக்கெட் இழபபிற்கு 53 ரன்கள் சேர்த்தது. 9-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார். 10-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆர்சிபி அணிக்கான தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார் தேவ்தத் படிக்கல். 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

10 ஓவர் முடிவில் ஆர்.சி.பி. விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் தேவ்தத் கடைசி பந்தில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அப்போது ஆர்சிபி 11.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடி வருகிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டி. நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com