வார்னர், ஸ்மித் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள்: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்

வார்னர், ஸ்மித் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள் என்று முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வார்னர், ஸ்மித் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள்: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வார்னர், ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் போன்ற முன்னணி வீரர்களுடன் நீண்ட நாட்களுக்குரிய ஒப்பந்த முறையை கடைபிடிக்க உள்ளது. தற்போது ஒரு வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கிறது. இதை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

புதிய ஒப்பந்தபடி வார்னர், ஸ்மித் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க இயலாது. வீரர்களின் காயத்தை குறைக்கும் எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்று கூறுகிறது.

இருந்தாலும் வார்னர், ஸ்மித் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘வார்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் இந்தியா வருவார். அதேபோல் ஸ்மித்தும் வருவார். அவர்கள் இங்கே விளையாடுவதை விரும்புகிறார்கள்.

ஐ.பி.எல். விளையாடிய எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும், இந்தியாவில் விளையாடுவதை விரும்பவில்லை என்று கூறமாட்டார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். நான் இந்தியாவிற்கு மீண்டும் வருவேன். ஆனால் விளையாடுவதற்கு அல்ல (சிரித்துக்கொண்டே).

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. காயம் ஏற்பட்டதால் துரதிருஷ்டவசமாக எனது ஐ.பி.எல். வாழ்க்கை குறுகியதாகவிட்டது. காயத்தில் இருந்து மீண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக ஒரு வருடம் விளையாடியது அதிர்ஷ்டம். அந்த வருடம் அனுபவித்து விளையாடினேன்’’ என்றார்.

மைக்கேல் கிளார்க் தற்போது டிவி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com