மனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் மகளை விஷம் கொடுத்து கொன்ற தந்தை, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ராஜீவ்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கங்கா (36) தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சன்விகா (7) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள்.

மகேஸ்வரன் கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது, தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை கங்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு கங்கா கணவன் அனுப்பிய பணம் முழுவதும் செலவாகி விட்டது என கூறியுள்ளார்.

இதனால் மகேஸ்வரனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாகவும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் மகேஸ்வரன் இன்று அதிகாலை தனது மகள் சன்விகாவுக்கு வி‌ஷத்தை கொடுத்து, தானும் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை, மகளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சன்விகா இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.

மகேஸ்வரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி மீதான நடத்தை சந்தேகத்தில் 7 வயது மகளை வி‌ஷம் குடித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com