காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை

ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை
Published on

ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த சரவணன் தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் வேற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்தார்.

இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com