டார்ஜிலிங் மலைப்பகுதியில் பதற்றம் நீடிப்பு: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கூர்கா ஜனமுக்தி மோச்சா கட்சியினர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் டார்ஜிலிங் மலைப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
டார்ஜிலிங் மலைப்பகுதியில் பதற்றம் நீடிப்பு: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்
Published on

டார்ஜிலிங்:

மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்த விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.

தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சி காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து, கூர்காலந்து பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமர் குருங்கிற்கு தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் இன்று சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டார்ஜிலிங்கல் மூடுபனி நிறைந்த மலைப்பாங்கான சாலைகளில் குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினருடன் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வாக்குவாதம்முற்றிய நிலையில், துணை ராணுவப்படைகள் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். துணை ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்த, அந்த இடம் போர்க்களமாக மாறியது. ஒரு காருக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தற்போதைய நிலையை உருவாக்கியது மாநில அரசுதான் என்றும், போலீஸ் படைகளை பயன்படுத்தி அரசு தங்களை ஒடுக்க விரும்புவதாகவும் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த அரசியல் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com