திருவோணம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு சேதம்

திருவோணம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
சிலிண்டர் வெடித்த விபத்தில் சேதமடைந்த வீட்டை படத்தில் காணலாம்
சிலிண்டர் வெடித்த விபத்தில் சேதமடைந்த வீட்டை படத்தில் காணலாம்
Published on

திருவோணம்:

தஞசை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சத்திரப்பட்டி கொள்ளுக்காடு புதுநகரை சேர்ந்தவர் செலவராஜ் இவரது மனைவி விஜயராணி (47) இவரது கணவர் செல்வராஜ் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கூரை வீட்டில் தனது மகனுடன் விஜயராணி வசித்து வருகிறார். சம்பவத்து அன்று நேற்று விஜயராணி தனது மகனுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

செங்கிப்பட்டி அருகே சென்றபோது உனது வீடு தீப்பிடுத்து எரிந்து கொண்டு இருக்கிறது என்று விஜயராணிக்கு ஊரிலுள்ள அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் தெரிவித்தனர்.

இதையடுத்து விஜயராணி உடனடியாக வந்து பார்த்தார். அப்போது வீட்டிலிருந்த 5 பவுன் நகை ரொக்கப்பணம் 40 ஆயிரம் கூரைவீடு முழுவதும் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் இருக்க அனைத்தனர். அப்போதுதான் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பயங்கர சத்தம் கேட்டதுடன் அருகில் உள்ள இரண்டு வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.

இந்த தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவோணம் காவல் நிலையத்தில் விஜயராணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com