தினகரனுடன் மேலும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர்: கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன்

தினகரனுடன் மேலும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர் என்று புதுவையில் தங்கியுள்ள கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறினார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், ஏழுமலை இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், ஏழுமலை இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை தனியார் விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலர் ஓட்டல் வளாகத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டனர்.

இதில். கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மேலும் உயரும். தினகரனை தொடர்பு கொண்டு பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர்.

தமிழகம் வர உள்ள கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். கவர்னர் எங்களை அழைத்து பேசுவார். அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டிய ஆட்சி. இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com