புதுக்கோட்டையில் புதுமண தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி-கணவர் உயிருக்கு ஊசல்

புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் புதுமண தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மனைவி பலியானார். கணவர் உயிருக்கு போராடி வருகிறார்.
புதுக்கோட்டையில் புதுமண தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி-கணவர் உயிருக்கு ஊசல்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் முரளி. இவருக்கும் திருமயம் நெடுங்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகள் மலர் (வயது 20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் வீடு திறக்கபடாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கணவர்- மனைவி 2 பேரும் வி‌ஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர் பரிதாபமாக இறந்தார். முரளி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு பேராடி வருகிறார்.

இது குறித்து மலரின் தந்தை உலகநாதன் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்ப தகராறில் கணவன் மனைவி வ‌ஷம் குடித்தனரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். புதுமண தம்பதியின் தற்கொலை முயற்சி அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com