தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்கும்: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியா கட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்கும்: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்:

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டாரெஸ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு நேற்று சென்றார். காபூலில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் அந்நாட்டு தலைமை நிறைவேற்று அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்தார்.

பின்னர் கட்டாரெஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, தீவிரவாதத்திற்கு நிதி உதவி மற்றும் தஞ்சம் அளிப்பது தொடர்பாக ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் அளித்த ஆதாரங்கள் மற்றும் கோப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து கட்டாரெஸ் கூறுகையில்:-

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட இரண்டு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த பொதுச் செயலாளராக என்னுடைய அலுவலகத்தை பயன்படுத்துவேன்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்கும். ஒரு நாடு தீவிரவாதத்தை ஆதரித்தால், அது பல்வேறு இடங்களை பாதித்து பின்னர் தனது சொந்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com