மூலனூரில் ரூ.68லட்சத்துக்கு பருத்தி விற்பனை

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,524க்கும்,குறைந்தபட்சமாக ரூ.6,200க்கும், சராசரியாக ரூ.7,350க்கும் விற்பனையானது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில் :

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 285 விவசாயிகள் தங்களுடைய 2,806 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.

மொத்த வரத்து 927 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 12 வணிகர்கள் வாங்க வந்திருந்தனர். பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,524க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,200க்கும், சராசரியாக ரூ.7,350க்கும் விற்பனையானது.

ஒட்டு மொத்த விற்பனைத்தொகை ரூ.68 லட்சத்து 5 ஆயிரத்து 367 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com