செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது. 554 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 426 பேர் உயிரிழந்துள்ளனர். 268 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 194 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 497 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 658 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com