நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: பில்லூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 8 அடி உயர்ந்தது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 நாளில் பில்லூர் அணையில் நீர் மட்ட உயரம் 8 அடியாக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: பில்லூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 8 அடி உயர்ந்தது
Published on

மேட்டுப்பாளையம்:

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் பில்லூர் ஆணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி. கடந்த 11-ந்தேதி காலை 6 மணிக்கு அணையின் நீர் மட்டம் உயரம் 68.75 அடியாக இருந்தது.

மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 12-ந்தேதி காலை 6மணிக்கு அணை நீர் மட்ட உயரம் 72.75 அடியாக உயர்ந்து நேற்று அணைக்கு வினாடிக்கு 631 கன அடி வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர் மட்ட உயரம் 76 அடியாக உயர்ந்தது.

மழை காரணமாக 2 நாளில் பில்லூர் அணையில் நீர் மட்ட உயரம் 8 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 5.50 மணிக்கு மின்சாரம் உற்பத்திக்காக ஒரு எந்திரம் இயக்கப்பட்டதில் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com