சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்

கண்டெய்னர் லாரி வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி சென்னை துறைமுகத்தில் இன்று முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்
Published on

ராயபுரம்:

சென்னை துறைமுகத்திற்கு வரும் சரக்குகளை வெளியே கொண்டு செல்லவும், வெளி இடங்களில் இருந்து சரக்குகளை துறைமுகத்துக்கு கொண்டு வரவும் கண்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பயன்பாட்டில் உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி கண்டெய்னர்களை கையாளும் முனையம், கண்டெய்னர் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக அனைத்து கண்டெய்னர் லாரிகள் கூட்டமைப்பு செயலாளர் எம்.எம்.கோபி மற்றும் நிர்வாகிகள், கண்டெய்னர் கையாளும் முனைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து இன்று முதல் சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com