இளைஞர்களுக்கு வாய்ப்பு- ராகுல் அறிவுறுத்தலை அடுத்து கோவா காங். தலைவர் ராஜினாமா

இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியதை அடுத்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாய்க் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு- ராகுல் அறிவுறுத்தலை அடுத்து கோவா காங். தலைவர் ராஜினாமா
Published on

பனாஜி:

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாய்க்(71) தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இது குறித்து பேசிய சாந்தா ராம், 'நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு இன்று காலை அனுப்பினேன். ராகுல் காந்தியின் வார்த்தை என்னை கவர்ந்தது. அவர் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூறினார். அதைத்தொடர்ந்து இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்' என கூறினார்.

ராகுல் காந்தியின் அறிவுறுத்தலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த முதல் மூத்த காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com