வேலூர், ராணிப்பேட்டை, ஆரணியில் காங்கிரசார் உண்ணாவிரதம்

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்த காட்சி.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்த காட்சி.
Published on

வாலாஜா:

எஸ்.சி., எஸ்.சி. பிரிவின் மாவட்ட தலைவர் நாகேஷ், துணை தலைவர்கள் மோகன், இப்ராகிம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அக்ராவரம் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் வக்கீல் அண்ணாதுரை உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.

முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல், சிறுபான்மை பிரிவு வாகித் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினர்.

ஆரணி அண்ணா சிலை அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். செய்யாறு முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com