மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்த கல்லூரி மாணவர் பிணம்: போலீசார் தீவிர விசாரணை

பவானி ஆற்றில் ஆண் பிணம் கிடைப்பதாக போலீசார் தவகவல் வந்தது. போலீசார் பிணத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்த கல்லூரி மாணவர் பிணம்: போலீசார் தீவிர விசாரணை
Published on

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரபஞ்சன் (வயது 18). இவர் தடாகத்தில் உள்ள பெரியப்பா கண்ணையன் என்பவரது வீட்டில் தங்கி இருந்து துடியலூர் வட்ட மலைபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக் னிக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரபஞ்சன் பொங்கல் விடுமுறையையொட்டி தனது வீட்டுக்கு சென்றார். பின்னர்கடந்த 7-ந் தேதி மீண்டும் பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அன்று இரவு 11 மணிக்கு கோவை வந்து விட்டதாக தனது பெற்றோரிடம் கூறினார். 

அதன் பின்னர் அவரது பெற்றோர் அவரை தொடர்பு கொண்ட போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கம் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பவானி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை மீட்டு இறந்தவரின் சட்டை பாக்கெட்டை சோதனை செய்தனர். அதில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் இறந்தது பிரபஞ்சன் என்பது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறிய பிரபஞ்சன் எதற்காக மேட்டுப்பாளையம் வந்தார். மேட்டுப்பாளையம் பவனி ஆற்றில் மூழ்கி எப்படி இறந்தார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com