போதை பொருள் விற்பனை - கல்லூரி மாணவர் கைது

வெளிநாட்டில் இருந்து போதை பொருளை ஆன்லைன் மூலம் வாங்கி சக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

போரூர்:

நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆன்லைனில்” ஓஜி வீட்” என்கிற போதைப் பொருளை வரவழைத்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேரை கடந்த 4-ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து போதை பொருள் ஆன்லைன் மூலம் வாங்கி சக கல்லூரி மாணவர்களை விற்பனைக்கு பயன்படுத்தி வந்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணகுமாரை வடபழனி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இவர்கள் வைத்திருந்த “ஓஜி வீட்” என்கிற போதைப்பொருள் ஒரு கிராம் ரூ2,500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com