சேலத்தில் கல்லூரி பஸ் மோதி ஆசிரியை பலி

சேலத்தில் கல்லூரி பஸ் மோதி ஆசிரியை பலி

சேலத்தில் இன்று காலை கல்லூரி பஸ் மோதிய விபத்தில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி மோட்டாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 57). இவர் வாழப்பாடி அருகே உள்ள நாட்டாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

சந்திரா இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். அவரது கணவர் கனகராஜ் வீட்டில் இருந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அஸ்தம்பட்டி சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வந்த போது பின்னால் வந்த கல்லூரி பஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சந்திரா மீது பஸ் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். கனகராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com