

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பில்லூர் மட்டம், கீழ் ஆர்செடின், மேல் ஆர்செடின், நான்சர்ச் ஆகிய குடியிருப்பு பகுதிகளையும், குடிநீரில் குளோரின் அளவினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
நான்சர்ச் சி.எஸ்.ஐ உயர்நிலை பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்து மாணவ, மாணவியர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
அதனை தொடர்ந்து பேரட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், இந்திரா நகர், பாரத்நகர், கல்குழி குடியிருப்பு பகுதிகளையும், பாரத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளியில் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தினை ஆய்வு செய்தார்.
பின்னர் குன்னூர் நகராட்சிக்குட்ட காந்திபுரம் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை, சுகாதார பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலைவசதி மற்றும் தனிநபர் கழிப்பறை வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக உதகை நகராட்சிக்குட்பட்ட பிங்கர்போஸ்ட் பெரியார் நகரில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர்கீதாப்ரியா, குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.