சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆனந்த் தகவல்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் வருகிற 31-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com