கோவை அருகே வேலை பார்த்த நகை பட்டறையில் தங்ககட்டி திருடிய ஊழியர் கைது

கோவை அருகே வேலை பார்த்த நகை பட்டறையில் தங்ககட்டி திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே வேலை பார்த்த நகை பட்டறையில் தங்ககட்டி திருடிய ஊழியர் கைது
Published on

கோவை:

கோவை பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர் நூர் முகமது மாலிக்(வயது 37). இவர் கெம்பட்டி காலனியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஜ்கர் அலி(41) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று நூர் முகமது மாலிக் 101 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகை செய்து தருமாறு கூறினார். அதனை வாங்கிக் கொண்ட அஜ்கர் அலி நகை செய்து கொடுக்காமல் மறு நாள் தங்ககட்டியுடன் தப்பி ஓடி விட்டார். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

இதுகுறித்து நூர் முகமது மாலிக் பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அஜ்கர் அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com