காஷ்மீர்: என்கவுண்ட்டர் பகுதியில் கல்வீச்சு தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

காஷ்மீரில் என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
காஷ்மீர்: என்கவுண்ட்டர் பகுதியில் கல்வீச்சு தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை முதல் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வந்தது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத் தளபதி அபு துஜானா உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ளூர் மக்கள் சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி திடீர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பாதுகாப்பு படையினரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனையடுத்து, தொடர்ச்சியாக கல்வீசி வன்முறையில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பு படையினர் திரும்பிக் கொண்டிருந்த போது புல்வாமா மாவட்ட மருத்துவமனை அருகில் அவர்கள் மீது இளைஞர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com