காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை - பொதுமக்களில் ஒருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திவரும் துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.
காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை - பொதுமக்களில் ஒருவர் பலி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கேயுள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி என்ற கிராமத்திற்குட்பட்ட மாலிக் மொஹல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தன.

இதையடுத்து, அந்த கிராமத்தை தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று காலை சுற்றிவளைத்தனர். அந்தப் பகுதியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன.

தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளை காப்பாற்றும் வகையில் அங்கிருந்தவர்களில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எரிந்து தாக்கினர். அவர்களை விரட்டுவதற்காக கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் முஹம்மது அஷ்ரப் கர்(34) என்பவர் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பெல்லட் குண்டு காயங்களுடன் பொதுமக்களில் 7 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com