ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வாலிபர் பலி

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வாலிபர் ஒருவர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் பகுதியில் ரோந்து செல்லும் ராணுவத்தினர்
பூஞ்ச் பகுதியில் ரோந்து செல்லும் ராணுவத்தினர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் மெண்டார் செக்டாரில் உள்ள தப்ராஜ் கிராமத்தில் பாகிஸ்தான் படையினர் நேற்று இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின்போது சிறிய ரக கையெறி குண்டுகளை வீசினர். இதில் மொகமது அப்துல் கரீம் படுகாயமடைந்து பலியானார்.

அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com