மும்பையில் நூதனமாக ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை செருப்பில் வைத்து கடத்திய நபரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #GoldSeized #Manarrested
மும்பையில்  நூதனமாக ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள்  கடத்தி வந்த நபர் கைது
Published on

பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, தேர்தல் முறைகேடுகள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரும் , காவல் துறையினரும்  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடாவினை ஒழிக்க  அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பை  சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்றுக் கொண்டிருந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

பிடிபட்ட தங்க கட்டிகள் 381 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 11 லட்சத்து 12 ஆயிரத்து 139 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #GoldSeized #Manarrested

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com