

புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளைக்குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் மகிழ்ச்சியை சந்தோஷத்தை கொண்டு வருகிறது.
மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக சமூக வாழ்விற்காக ஏசுபிரான் மன்னிப்பு, பெருந்தன்மை, கருணை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளையும் போதித்தார். ஏசுகிறிஸ்து உலகில் பேரமைதியை நிலைநாட்டவும், சந்தோஷத்தை கொண்டு வரவும் போதித்த நற்செய்தியை, நற்பண்புகளை பின்பற்றுவோம் எனும் உறுதியை மேற்க்கொள்வோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நான் இதய பூர்வமான வாழ்த்துக்களை புதுவை மாநிலத்திலும், நாடு முழுவதும் மற்றும் உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.