சித்தோடு அருகே குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி பலி

சித்தோடு அருகே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியதால் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சித்தோடு அருகே குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி லதா. இவரது மகன்கள் ஜெயராஜ்(வயது27). தொழிலாளி. பிரபாகரன்(23). லாரன்சும், லதாவும் இறந்து விட்டனர்.

ஜெயராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது குடும்பத்தினர் ஜெயராஜிடம் கூறினார்களாம்.

இதனால் ஜெயராஜ் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தார்.

சிகிச்சைக்காக ஜெயராஜை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜை கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com