கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

திருமண செலவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்து உள்ளது.

திருமணத்துக்கு தேவையான செலவுகளை குறைத்து ஆடம்பரத்தை முற்றிலும் நீக்கிட வேண்டும். திருமணத்தை தடபுடலாக நடத்திட வேண்டும் என்பதற்காக அதிகம் செலவிடக்கூடாது. கலப்பு திருமணம் செய்யும் நபர்களுக்கு மாநில அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதற்காகவும், கலப்பு திருமணம் செய்வோர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்வதற்காகவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com