சென்னையின் எப்.சி. அணியில் கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம்

4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் நெதர்லாந்தை சேர்ந்த கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சென்னையின் எப்.சி. அணியில் கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம்
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் நெதர்லாந்தை சேர்ந்த கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

29 வயதான நெல்சன் கூறுகையில், ‘ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நெதர்லாந்தை சேர்ந்த நண்பர்கள் பலரும் விளையாடி இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக என்னிடம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கால்பந்து போட்டி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பங்கெடுப்பதுடன், சென்னையின் எப்.சி. அணி மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com