தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரெயில்
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06039), சென்னை எழும்பூரில் இருந்து 17-ந்தேதி (இன்று) பிற்பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

* திருச்சி-கிருஷ்ணராஜபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06049), திருச்சியில் இருந்து 17-ந்தேதி(இன்று) காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்று மதியம் 2.30 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்.

* நாகர்கோவில்-சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(82616), நாகர்கோவிலில் இருந்து வரும் 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

* சென்னை சென்டிரல்-செகந்திராபாத் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(02759), சென்னை சென்டிரலில் இருந்து வரும் 23-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com