சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள கோவில் யானையை கருணைக் கொலை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி
Published on

சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. படுத்த படுக்கையாக உள்ளதால் அதனை மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. எனவே, யானையை கருணைக்  கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, யானையை கருணை கொலை செய்யமுடியுமா? என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com