சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி பணப்பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.27 லட்சம் கொள்ளை

சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி பணப்பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.27 லட்சம் கொள்ளைடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி பணப்பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.27 லட்சம் கொள்ளை
Published on

சென்னை:

சென்னை எழும்பூரில் தனியார் பணப் பரிமாற்ற நிறுவனம் உள்ளது.

இங்கு நிறுவன உரிமையாளரின் மகன்கள் நசீர், காஜா மைதீன், ஊழியர்கள் முகமது, பஷீர் ஆகியோர் இருந்தனர்.

அப்போது ஒரு மர்ம கும்பல் அந்த நிறுவனத்துக்குள் புகுந்தது. அவர்கள் தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்த ரூ.27 லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி 4 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

அந்த வாகனம் தீவுத் திடலை அடைந்ததும் 4 பேரையும் அங்கு இறக்கி விட்டு விட்டு மர்ம கும்பல் வாகனத்தில் தப்பிச் சென்று விட்டது.

இதுகுறித்து எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com