

கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியஓபுளாபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர். சீனிவாசன். இவரது மகள் செந்தமிழ்ச் செல்வி(வயது19).
இவர் சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் தனியாக இருந்த செந்தமிழ்ச்செல்வி திடீரென தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews