

கோவா:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன.
இதற்கிடையே, ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி இன்று கோவாவில் நடந்தது. ஆட்டத்தின் முதல் பாதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின்-64 வது நிமிடத்தில் கோவா அணியின் புருனோ ஒரு கோல் அடித்தார். அவருக்கு பதிலடியாக சென்னை அணியின் அனிருத் தாபா 71-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
அடுத்த ஆட்டம் பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ISL #FCGoa #ChennaiyinFC #Tamilnews