சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பயிற்சியாளர் பெய்லிசுடன் ஆலோசனையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.
பயிற்சியாளர் பெய்லிசுடன் ஆலோசனையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.
Published on

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. ‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் நியூசிலாந்து, இலங்கை அணிகள் வாய்ப்பை இழந்து நடையை கட்டின.

இந்த நிலையில் கார்டிப்பில் இன்று (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோத உள்ளன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இங்கிலாந்து தான். லீக் சுற்றில் வங்காளதேசம் (8 விக்கெட் வித்தியாசம்), நியூசிலாந்து (87 ரன்), ஆஸ்திரேலியா (40 ரன்) ஆகிய அணிகளை புரட்டிஎடுத்து இங்கிலாந்து கம்பீரமாக அரைஇறுதிக்கு வந்திருக்கிறது.

அதிரடி பாணியை கையாளும் இங்கிலாந்து அணி இப்போதெல்லாம் அடிக்கடி 300 ரன்களுக்கு மேல் குவிப்பதை பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு அந்த அணியின் பேட்டிங் வரிசை ஆழமாக உள்ளது. 9-வது வரிசை வீரர்கள் வரை பேட்டிங் திறமை கொண்டவர்கள். மோர்கன், பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஜோ ரூட், ஹாலெஸ், மொயீன் அலி ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இதில் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அணியின் முதுகெலும்பாக விளங்குகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக்கில் இங்கிலாந்து 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது சதம் அடித்து அணியை காப்பாற்றினார்.

இதே போல் அந்த அணியின் பந்து வீச்சையும் குறை சொல்ல முடியாது. தொடர்ந்து கோலோச்சி வரும் இங்கிலாந்துக்கே இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதில் சந்தேகமில்லை. அணியில் ஒரு மாற்றம் இருக்கக்கூடும் என்று கேப்டன் மோர்கன் நேற்று தெரிவித்தார். ரன் எடுக்க தடுமாறும் ஜாசன் ராய்க்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் லீக்கில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா (19 ரன் வித்தியாசம்), இலங்கை (3 விக்கெட்) அணிகளை தோற்கடித்து அரை இறுதியை உறுதி செய்தது. யாரும் கணிக்க முடியாத ஒரு அணியான பாகிஸ்தான் எப்போது விசுவரூபம் எடுக்கும் என்பதை சொல்ல முடியாது. அந்த அணி பந்து வீச்சில் மிக வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் மிடில் வரிசையில் நிலவும் சீரற்ற தன்மை பலவீனமாக பார்க்கப்படுகிறது. சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் மிடில்வரிசையில் அணியை தூக்கி நிறுத்த வேண்டியது அவசியம்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. கடந்த 2 ஆண்டுகளாக உண்மையிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களை போன்ற உலகத்தரம் வாய்ந்த அணியுடன் மோத வேண்டும் என்றால், மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இதுவரை ஒரு போதும் இறுதிசுற்றை எட்டியது இல்லை. இதற்கு முன்பு 3 முறை அரைஇறுதியோடு வெளியேறி இருக்கிறது. இந்த முறையாவது தடையை வெற்றிகரமாக கடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க் வுட், ஜாக் பால்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com