பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி கூடுகிறது: மத்திய அமைச்சரவை முடிவு

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி கூடுகிறது: மத்திய அமைச்சரவை முடிவு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

குஜராத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அறிவிக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது என இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 5-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றவுடன் குளிர்கால கூட்டத்தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com