தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள்- மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவக்கல்வி
மருத்துவக்கல்வி
Published on

புதுடெல்லி:

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் அதாவது, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் கேட்டிருந்தது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் அமைக்கப்பட உள்ளன. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. மூன்று கல்லூரிகளிலும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 4600 ஆக உயரும். 

X

Maalai Malar
www.maalaimalar.com