

தஞ்சாவூர்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கணிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் சுரண்டி பாலைவனமாக மாற்றி வருகிறது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பூமிக்கடியில் செலுத்தி நீராதாரம் இல்லாத சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி விடும். இதற்கு மாநில அரசும் துணை போகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அது நிறைவேறாமல் உள்ளது. காவிரி மேற்பார்வை குழு அமைப்பதாக கூறுகிறது, இது தேவையில்லை. மக்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே தேவை. அதை தான் எதிர்பார்க்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக தேர்தல் தடையாக இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews