காவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8-ந் தேதி ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8-ந்தேதி ஆலோசனை நடத்துகிறது.
காவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8-ந் தேதி ஆலோசனை
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8-ந்தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com