

சேலம்:
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கக் கோரியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், விவசாயிகளின் நலனை காத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பொன்னையன் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் பன்னீர்செல்வம் எம்.பி., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இப்போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் யாதவ மூர்த்தி, சரவணன், சண்முகம், தியாகராஜன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் துரைராஜ், நேதாஜி, பெரியபுதூர் கண்ணன், சதீஸ்குமார், சார்பு அணி செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு கிளைக் கழக செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாமக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள குளக்கரை திடலில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை தாங்கினார். இதில் மகளிர் அணி இணை செயலாளரும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வி.சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் சேவல் எஸ்.ராஜூ, தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இப்போராட்டத்தில் முன்னாள் துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில் சுந்தரம், அரசு வக்கீல் தனசேகரன், பொத்தனூர் நகர செயலாளர் எஸ்.என்.நாராயணன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் விஜய்பாபு, பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, நகர பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செந்தில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், எம்.ஜி.ஆர்.மன்றம், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், சார்பு அணி, வார்டு, கிளைக்கழக செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் எம்.பி. அசோக்குமார், எம்.எல்.ஏ.க்கள் மனோ ரஞ்சிதம் நாகராஜ், சீ.வி.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தபால் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.