இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம் கோலாகலம்

ஈஸ்டர் திருநாளான இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட ஜெருசலேம் நகரில் உள்ள பழைமையான தேவாலயத்தில் இன்று கோலாகல விழாக்கோலம் பூண்டுள்ளது. #Easterfestival #Jerusalemchurch
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம் கோலாகலம்
Published on

ஜெருசலேம்:

யூதாஸ் என்னும் சீடரால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்து தற்போதைய ஜெருசலேம் நகரில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உயிர் பிரிந்த இந்த இடத்தில் கட்டப்பட்ட சுமார் 1200 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது.

நான்காம் நூற்றாண்டு காலத்தில் சிதிலம் அடைந்திருந்த பழைய தேவாலயத்தின் மீது இந்த புதிய தேவாலயம் அமைக்கப்பட்டது.

இந்த இடத்தில் இருந்துதான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு சென்றதாக நம்பப்படுவதால் இந்த தேவாலயம் கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான புனிதத்தலமாக உள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஜெருசலேமில் உள்ள இந்த தேவாலயத்துக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளையொட்டி உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள யாத்ரீகர்களும், இஸ்ரேல் நாட்டு மக்களும் இன்று இந்த புனிதத்தலத்தில் கூடி, கோலாகலமாக பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews #Easterfestival #Jerusalemchurch

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com