கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை அறிவித்த உரிமையாளர்

உ.பி.யில் காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை அறிவித்த உரிமையாளர்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெட்டாபூர் நகரைச் சேர்ந்த தினேஷ் பாபு என்பவருக்கு சொந்தமான கிளி காணாமல் போனது. கிளி காணாமல் போனதால் தினேஷின் குழந்தைகள் சாப்பிட மாட்டோம் என அடம் பிடித்தனர். இதனால் தினேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தனது கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

கிளி கிடைக்காததால் பரிசுத்தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். 26 நாட்களுக்கு பிறகு அவரது கிளி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்து தந்தவருக்கு தினேஷ் பரிசுத்தொகையை வழங்கினார்.

தினேஷ் இரண்டு கிளிகளை 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி கொண்டு வந்தார். அதற்கு மாதம் செலவாகும் தொகை ஆயிரம் ரூபாயாகும். அந்த கிளிகள் இங்குள்ள தானியங்களை சாப்பிடாது. லில்லி எனப்பெயரிடப்பட்ட இந்த கிளியை பிறந்த சில நாட்களிலிருந்து தினேஷின் குழந்தைகள் கவனமாக வளர்த்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com