ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி

ஜெயலலிதா பற்றி அவதூறு பேசியதாக கூறப்பட்டதில் விஜயகாந்த் மீதான வழக்குகளை புதுக்கோட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜெயலலிதா - விஜயகாந்த்
ஜெயலலிதா - விஜயகாந்த்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் கடந்த 2012ம் ஆண்டு தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜயகாந்த் மீது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்த அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு வக்கீல் ராமநாதன், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், விஜயகாந்த் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com